அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடி வாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. “எதைத் துரத்தலாம்?” என்று தயங்கி நின்றது.
பிறகு, “சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்” என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை, “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து திரும்பி வந்து எதிர் பாதையில் ஓடியது.
ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்து விட்டிருந்தது.
இப்படித்தான் முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர்கள் கிடைத்ததை இழந்து நிற்கிறார்கள்.
- நன்றி: கார்த்தி-
ஆம் இப்படி தான் தவறக முடிவு செய்கிறர்ர்
ReplyDeleteஆம் இப்படி தான் தவறக முடிவு செய்கிறர்ர்
ReplyDeleteஆம் இப்படி தான் தவறக முடிவு செய்கிறர்ர்
ReplyDeleteஆம் இப்படி தான் தவறக முடிவு செய்கிறர்ர் AND WELCOME FRIEND SUPER
ReplyDelete