பாட்டி தாத்தா சொன்ன கதைகள் ” தகாத நட்பு ஆபத்தைத் தரும் “.!!

ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூன்றும் கூட்டு வைத்துக் கொண்டு வேட்டைக்குப் போயின. வேட்டையில் ஒரு கொழுத்த மான் கிடைத்ததாம்.

சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லிச்சாம்.ஓநாயும் மூன்று சம பங்கா பிரிச்சுதாம்.



இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிங்கம், காட்டு ராஜா எனக்கு இவர்கள்
சமமானவர்களா,எனக்கு மரியாதை இல்லையா , அவர்களுக்கும் எனக்கும்
சமபங்கா அப்படியென்று நினைத்துக்கொண்டு பட்டென ஓநாயை அறைஞ்சுதாம்.

அடி வாங்கிய ஓநாய்  மயக்கமா விழுந்திட.சிங்கம் நரியைக் கூப்பிட்டு பங்கு
பிரிக்கச் சொல்லிச்சு.நரியும் பவ்வியமா மானோட காது ஒன்றை மட்டும் தனக்கு எடுத்துக்கொண்டு, மிச்சத்தை சிங்கத்தின் பக்கமாகத் தள்ளியது.

சிங்கம் ஆச்சரியமாகி, நரியே, எப்படி உனக்கு இவ்வளவு பவ்வியமும் மரியாதையும் வந்தது என்று கேட்டது.நரி இன்னும் பணிவாச் சொல்லிச்சாம், அதோ அங்கே மயங்கிக் கிடக்கிற ஓநாயிடமிருந்து  கற்றுக்கொண்டேன், அப்படியென்று சொல்லிவிட்டு ஒட்டம் பிடித்ததாம்.

No comments:

Post a Comment